ஸ்ரீ யோக ஞான தட்சிணாமூர்த்தி திருக்கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்

திருவள்ளூர்: சித்திரை மாதம் முதல் நாள் வியாழக்கிழையான நேற்று அதிகாலை 4.09 மணிக்கு  குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இந்த குரு பெயர்ச்சி  அதிசய குருபெயர்ச்சி எனவும் கூறப்படுகிறது.‌ ஸ்ரீ தட்சணாமூர்த்தி ஸ்ரீ ஐஸ்வரேஸ்வரராக காட்சித் தந்து பொன், பொருள், பொற்காசுகள் இவைகளை ஸ்ரீ மகாலட்சுமிக்கும், குபேரனுக்கும் பிரித்து தந்தார். இந்த குருப்பெயர்ச்சி தினத்தன்று நாமும் ஸ்ரீ யோக ஞான தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்தால் நமக்கும் வறுமை நீங்கி, பொன், பொருள், அஷ்ட ஐஸ்வர்யங்கள், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். இன்னிலை குரு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி திருவள்ளூர் அடுத்த காக்களூர், பூங்கா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ யோக ஞான தட்சிணாமூர்த்தி திருக்கோயிலில் குருபெயர்ச்சி முன்னிட்டு பரிகார மஹாயாகம் நடைபெற்றது.

இந்த திருக்கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு அனுக்னஞ விக்னேஸ்வர பூஜையும், ஸ்ரீ சூக்த ஹோமம், லட்சுமி ஹோமம், காலி ஹோமம், ஸ்ரீ நவக்கிரக ஹோமம் மற்றும் ஸ்ரீ யோக ஞான தட்சிணாமூர்த்தி அஸ்தர ஹோமம் மூலமந்திர ஹோமமும், திரவியங்களைக் கொண்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. மேலும் பரிகார மஹாயாகம், பிறகு அதிகாலை 3 மணியளவில் 108 லிட்டர் பாலாஅபிஷேகமும், 3.30 மணியளவில் மஹா பூர்ணாஹுதியும் நடைபெற்றது. மேலும் 4:09 மணிக்கு ஸ்ரீ யோக ஞான தட்சிணாமூர்த்தி பெயர்ச்சி அடையும் நேரத்திற்கு விசேஷ அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இதில் மீனம், மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம் போன்ற ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்து பரிகாரங்களை செய்து கொண்டனர்.

Related Stories: