மகாவீரர் ஜெயந்தி 500 பேருக்கு அன்னதானம்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஜெயின் சங்கம் சார்பில் பகவான் மகாவீர் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு  பவுத்த துறவி சுதா கவர்ஜி தலைமை தாங்கி மகாவீரரின் வாழ்க்கை வரலாறு தத்துவத்தை எடுத்துக்கூறியும், வாழு அல்லது வாழவிடு, எந்த உயிரினத்தையும் சித்ரவதை செய்து கொள்ளக்கூடாது, மது அருந்தக்கூடாது, சிகரெட் பிடிக்கக்கூடாது, நல்ல ஒழுக்கம், சாதாரண வாழ்க்கை, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்பதை கடைப்பிடித்து நாம் நிம்மதியாக வாழவேண்டும் என கூறினார். இதனைத் தொடர்ந்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: