பி.பி.புரம் கிராமத்தில் வெங்கடேஸ்வர கோயில் கும்பாபிஷேகம்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த செட்டிவாரிபள்ளி பி.பி.புரம் கிராமத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கலை நுட்பத்துடன் கட்டப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. இதனையொட்டி, கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு நித்திய ஹோம பூஜைகள் நடைபெற்றது. 3ம் நாளான நேற்று காலை மஹா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கோயில் முன்பு குவிந்தனர். மஹா பூர்ணாஹுதி ஹோம பூஜைகள் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க புனித நீர் கலசங்களை புறப்பாடு நடைபெற்றது.  பின்னர், கோயில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, கோயில் முன்பு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா எனறு பக்தி பரவசத்துடன் பெருமாளை வழிபட்டனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது‌‌. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Related Stories: