×

முதல்வர் நிவாரண நிதிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரூ.10 லட்சம்

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் இணைந்து நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தியது. இதில் தமிழ் திரையுலகின் பல்வேறு சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முகாமில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏவும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் திரையுலகை சேர்ந்த பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் என்.ராமசாமி, தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். பிறகு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் அளித்தார். …

The post முதல்வர் நிவாரண நிதிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரூ.10 லட்சம் appeared first on Dinakaran.

Tags : Producers Association ,Chennai ,Tamil Filmmakers Union ,South Indian Film Trade Commission ,Corona ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் ஈடுபட உள்ள கொசு...