×

கண்ணமங்கலம் கோயிலில் ஜெர்மன் பேராசிரியையுடன் வேலூர் தொழிலதிபர் திருமணம்

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வேலூர் தொழிலதிபருக்கும், ஜெர்மன் நாட்டு பேராசிரியைக்கும் நேற்று காலை இந்து கலாசார முறைப்படி திருமணம் நடைபெற்றது. வேலூரை சேர்ந்தவர் சுந்தர்ராஜி(67). இவரது மனைவி ரோஜா(57). இவர்களது மூத்த மகன் கோபி(32). இவர் ஜெர்மன் மற்றும் ஸ்வீடன் நாடுகளில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் ஐரீஸ்(27). இவர் அங்குள்ள அரசு கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு இருவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, இந்து கலாசார முறைப்படி இந்தியாவில் திருமணம் செய்ய காதல் ஜோடி விரும்பியது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து, நேற்று காலை இவர்களது திருமணம் சிறப்பாக நடந்தது. திருமணத்தில் நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags : Vellore ,Kannamangalam temple , Kannamangalam, German professor, married businessman
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...