மாணவிக்கு பாலியல் வன்முறை ஐஐடி இயக்குனருக்கு நோட்டீஸ்: தேசிய எஸ்சி ஆணையம் அதிரடி

புதுடெல்லி:   சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி ஒருவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை பி.எச்.டி படித்தார். மேற்குவங்காளத்தை சேர்ந்த அந்த மாணவி  ஐ.ஐ.டி. விடுதியில் தங்கி படித்து வந்தபோது, தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேராசிரியர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து வழக்கின் முக்கிய குற்றவாளியான மேற்கு வங்கம் டைமண்டு ஹார்பர் மாவட்டம் ராய்நகரை சேர்ந்த கிங்சோ தெப்சர்மாவை கொல்கத்தாவில் வைத்து தமிழக தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையானது தற்போது சிபிசிஐடி வசம் உள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தில் நேற்று புகார் மனு வழங்கப்பட்டது. அதனை பரிசீலனை செய்த ஆணையம், சென்னை ஐஐடி இயக்குனர், காவல் கண்கானிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அடுத்த 15 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: