மேலூர் அருகே லஞ்சம் வாங்கிய மின் பொறியாளர் கைது

மேலூர்: மேலூர் அருகே விவசாய மின் இணைப்பு தருவதற்கு லஞ்சம் வாங்கிய மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொட்டாம்பட்டி மின்வாரியத்தில் இளநிலை மின் பொறியாளராக பணியாற்றியவர் தங்க முனியாண்டி (39). இவர் கொட்டாம்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி பெயரில் இலவச விவசாய மின் இணைப்பு தருவதற்கான சான்று வழங்குவதற்கு ரூ.5,500 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்திருந்து, தங்க முனியாண்டி லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்து நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: