ராஜபக்சவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கையெழுத்து

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் தீர்மானம் வருகின்றன. பொருளாதார நெருக்கடியை தடுத்து நிறுத்த தவறிய அதிபர் கோத்தபய பதவி விலக வலியுறுத்தி இலங்கை முழுவதும் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு நெருக்கடி முற்றியுள்ள நிலையில் அரசுக்கு எதிராக தற்போது எதிர்க்கட்சிகளும் களத்தில் குதித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள கோத்தபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கையெழுத்திட்டுள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவும் எதிர்க்கட்சிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. அத்துடன் இலங்கை அதிபருக்கான அதிகாரங்களை குறைப்பதற்கான தீர்மானமும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. கோத்தபய மற்றும் மகிந்த ஆகியோருக்கு எதிரான தீர்மானங்களுக்கு இலங்கையிலுள்ள பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

நெருக்கடிகள் முற்றிவரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பிரதமர் மகிந்த அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள், வெண்ணை, பேரிட்சை, ஆரஞ்சு, கொழுப்பு நீக்கப்பட்ட பால், தயிர், ஓட்ஸ், சாக்லேட், பாஸ்தா ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பாட்டில்கள், பீர், வெளிநாட்டு மதுபானங்கள், வாசனை திரவியங்கள், அழகுசாதன பொருட்கள் ஆகியவையும் இதில் உள்ளடங்கும்.     

Related Stories: