×

வாணியம்பாடி, திருப்பத்தூர் அருகே எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்-400க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்பு

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பகுதியில் எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது. இதில் 200க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன.
கந்திலி ஒன்றியம்  குனிச்சி அடுத்த சின்ன குனிச்சி பகுதியில் 25ம் ஆண்டு எருது விடும் திருவிழா ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட காளைகள் உரிய பாதுகாப்பு வசதியுடன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நடைபெற்றது.

இந்த விழாவை திருப்பத்தூர் துணை ஆட்சியர் லட்சுமி மற்றும் தாசில்தார் சிவப்பிரகாசம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும்  ஆந்திரா மாநில  சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 2500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர்  கலந்து கொண்டனர்.

மேலும் நிர்ணயிக்கப்பட்ட தொலைவை குறைந்த நொடியில் சீறிப்பாய்ந்த காளைகளுக்கு முதல் பரிசாக ₹65 ஆயிரம், இரண்டாவது பரிசாக ₹55 ஆயிரம் பரிசு என சுமார் 35 வரையிலான பரிசுகள் காளைகளுக்கு வழங்கப்பட்டன. இதில் சீறிப்பாய்ந்து ஓடும் காளைகளை இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் விரட்டியதில், 30 பேர் லேசான காயமடைந்தனர். 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி பகுதியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் ஆந்திர மாநிலம், கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை கண்டுகளித்தனர்.

இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறுகிய நேரத்தில் ஓடிய காளைக்கு முதல் பரிசாக ₹50 ஆயிரத்தை தாசிரியப்பனூர் கிராமத்தை சேர்ந்த காளையின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டது. 2வது பரிசு நிம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜான்சிராணி என்பவரின் எருதுவின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டது. விழாவில், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் என ஏராளமான அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags : Vaniyambadi, Tirupati , Tirupati: Bulls ran wild at a bullfight at Kunichi area next to Tirupati. More than 200 bulls in it
× RELATED திருப்பத்தூர் மாவட்டம்...