×

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த தினம் இன்று: பிரதமர் நநேர்திர மோடி நேரில் மரியாதை

டெல்லி: ஜாலியன் வாலாபாக் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு பிரதமர் நநேர்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். 1919-ம் ஆம் ஆண்டு இந்நாளில் ஜாலியன் வாலாபாக்கில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். அவர்களின் ஈடு இணையற்ற துணிவும் தியாகவும் வரும் தலைமுறையினரை ஊக்குவிக்கும். கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் ஸ்மாரக் வளாகத்தின் திறப்பு விழாவில் எனது உரையைப் பகிர்ந்துக் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டார். 1919-ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த தினம் இன்று.

ஜாலியன் வாலாபாக் படுகொலையில் ஏராளமான மக்கள் வீரமரணம் அடைந்தனர். காலனித்துவ நிர்வாகத்திற்கு அடக்குமுறை அதிகாரங்களை வழங்கிய ரவுலட் சட்டங்களுக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மக்கள் பிரிட்டிஷ் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களை நினைவுகூறும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையிலும் பிரதமர் மோடி இன்று மரியாதை செலுத்தினார்.

Tags : Jallianwala Bagh ,Narendra Modi , Jallianwala Bagh Massacre, Prime Minister Modi, Hon
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...