2022 ஐபிஎல் இறுதிப்போட்டி மே 29ல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல்

டெல்லி: 2022 ஐபிஎல் இறுதிப்போட்டி மே 29ல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் நடைபெறாத ஐபிஎல் போட்டிகளில் இந்த முறை இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் மும்பை வாங்கடே மைதானத்தில் கடந்த மார்ச் 26ம் கோலாகலமாகத் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் போட்டியில் ராஜஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 2ம் இடத்திலும், லக்னோ அணி 3வது இடத்திலும் உள்ளது.

மும்பை, புனே ஆகிய இரண்டு நகரங்களில் மட்டுமே சிறப்பாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. லீக் சுற்றுப் போட்டிகளுக்கள் மட்டுமே எங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிளே ஆப் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி எங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 2022 ஐபிஎல் இறுதிப்போட்டி மே 29ல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் கொல்கத்தா, லக்னோவில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: