கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட்

கரூர்: கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 4 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் என்.புதூர், புகழூர் சர்க்கரை ஆலை சாலை, வால்காட்டுப்புதூர் உட்பட 4 இடங்களில் சாலை போடப்படாமலே ஒப்பந்ததாரருக்கு நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ரூ.3 கோடி பணம் வழங்கியதாக கலெக்டரிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் அளித்திருந்தார். அதன் பேரில், நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கரூர் கோட்ட பொறியாளர் சத்தியபாமா, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபாலசிங், கோட்ட கணக்கர் பெரியசாமி ஆகிய 4 பேரை நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்து தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு  பிறப்பித்துள்ளார்.

Related Stories: