முதல்வர் பற்றி அவதூறு கரூர் பாஜ பிரமுகர் கைது

கரூர்: தமிழக முதல்வர் மற்றும் நிதித்துறை அமைச்சர் குறித்து டுவிட்டரில் அவதூறாக சித்தரித்து பரப்பிய கரூரை சேர்ந்த பாஜ பிரமுகரை போலீசார் கைது செய்தனர். கரூர் ஆண்டாங்கோயில் கீழ்பாகம் பகுதியை சேர்ந்தவர் தீபக் சூரியன்(31). இவர், வாங்கல் காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் அளித்த புகாரில், தனது டுவிட்டரை பார்வையிட்ட போது, டிவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர், நிதியமைச்சர் ஆகியோரை தவறாக சித்தரித்து பதிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வாங்கல் போலீசார் விசாரணை நடத்திய போது ட்விட்டரில் பதிவிட்டது, கரூர் மாவட்டம் நெரூர் வடபாகம் பகுதியை சேர்ந்த விக்னேஷ்(28) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விக்னேஷை நேற்று காலை கைது செய்தனர். இந்த வழக்கில் கைதான விக்னேஷ், பாஜக கிழக்கு ஒன்றிய இளைஞரணி முன்னாள்  செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: