×

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டி.டி.வி.தினகரனிடம் 9 மணி நேரம் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி விசாரணை

புதுடெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகயத்தில் ஆஜரான டி.டி.வி.தினகரனிடம் 9 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் தலைமையில் அதிமுக இரண்டாக உடைந்தது. இதன் காரணத்தினால் இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி ஆகியவற்றை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து மதுசூதனல் தலைமையிலான இபி எஸ், ஓபி எஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சி ஆகியவற்றை ஒதுக்கீடு  செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் அமமுக என்ற புதிய கட்சியை தனியாக துவங்கினார்.

இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து டெல்லி போலீஸ் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்தது. அதேப்போன்று டி.டி.வி.தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூன் மற்றும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் உட்பட 9க்கும் மேற்பட்டோரையும் டெல்லி போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து சுமார் 69 நாட்களுக்கு பின்னர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் தற்போது டிடிவி.தினகரன் வெளியில் உள்ளனர்.

டெல்லியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரின் மனைவியை மிரட்டி ரூ.2015 கோடி பணம் பறிக்க முயன்றது, நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி ஆகியோரிக்கு பல கோடி மதிப்புள்ள பொருட்களை பரிசாக வழங்கியது ஆகியவை தொடர்பான வழக்கில் திகார் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரிடம் கடந்த வாரம் கைது செய்த அமைலாக்கத்துறை, பல்வேறு கோணங்களில் தொடர் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் அப்போது இரட்டை இலை சின்னம் தொடர்பாக டி.டி.தினகரன் தன்னிடம் ரூ.10கோடி தந்ததாக வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இதனை அடிப்படையாக கொண்டு ஏப்ரல் 6ம் தேதி நேரில் ஆஜராகும் படி டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் புதுடெல்லி அவுரங்சிப் சாலையில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று காலை சுமார் 11.30 மணி அளவில் நேரில் ஆஜரானார். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில்,\” இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க பேரம் பேசப்பட்டது எப்படி?. அதன் முதற்கட்டமாக ரூ.10கோடி முன் பணமாக தமக்கு வழங்கப்பட்டதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அவரை உங்களுக்கு யார் அறிமுகம் செய்து வைத்தார்கள்?. மேலும் லஞ்சத் தொகை எவ்வாறு கைமாற்றப்பட்டது, வேறு யாரெல்லாம் இதில் தொடர்பில் இருந்தார்கள், தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட முறை என்ன?, அவர்கள் உன்மையான தேர்தல் அதிகாரிகள் என்றால், பெயர் உட்பட அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டு என்பது தொடர்பாக சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, டிடிவி.தினகரன் அளித்த வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.


Tags : DTV ,Dinakaran ,Double Leaf , DTV Dinakaran arrested for 9 hours in bribery case
× RELATED சொல்லிட்டாங்க…