×

சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை வரை ரூ.485 கோடியில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும்: பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.485 கோடியில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கிறார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை மீண்டும் கூடியது. இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள் (பொதுப்பணித்துறை) துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இதற்கு துறையின் அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து வருகிறார். அப்போது பேசிய அவர்,

* சென்னையில் 4 இடங்களில் ரூ.56 கோடி மதிப்பில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கப்படும்.

* தாம்பரம் சண்முகம் சாலை அருகே ரூ.10 கோடி மதிப்பில் இணைப்புச் சாலை அமைக்கப்படும்.

* பாடி மேம்பாலம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலம் ரூ.100 கோடி மதிப்பில் அகலப்படுத்தப்படும்.

* சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டப்படும்.

* கிண்டியில் பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

* உதகமண்டலம் நகருக்கு மாற்று பாதை ரூ.70 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

* சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹால் ரூ.16 கோடியில் புனரமைக்கப்படும்.

* கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை உயர்மட்ட சாலை அமைக்க ரூ.45 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

* குன்றத்தூர் சாலை சந்திப்பில் ரூ.322 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும்.

* கொடைக்கானல் மலைப்பகுதியில் வாகன நெரிசலை குறைக்க தேவையான இடங்களில் வாகன நிறுத்தம் அமைக்கப்படும்.

* வாகன நிறுத்தங்கள் அமைக்க ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.


Tags : Thenampeta - Saitapet ,Chennai Anna Road ,Minister ,A. V.V Velu , Denampet - Saidapet, High Road, Minister E.V.Velu
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...