ஈரோடு, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் மொத்தம் 9 ஆற்றுப் பாலங்கள் ரூ.136.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்: அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: ஈரோடு, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் மொத்தம் 9 ஆற்றுப் பாலங்கள் ரூ.136.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். உதகமண்டலம் நகருக்கு மாற்றுப் பாதை ரூ.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், பசுமலையில் ரூ. 26.33 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கப்படும். தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனத்தின் தரத்தை நவீன வசதிகளுடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள திட்டங்களுக்கும் திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறோம். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் கூறினார். சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் திமுகவின் நிலைப்பாடு இப்போதும் மாறவில்லை. 8 வழிச்சாலை திட்டத்தில் பொதுமக்களின் கருத்தை கேட்ட பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.

Related Stories: