அயோத்தியா மண்டபம் தொடர்பாக பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!!

சென்னை: அயோத்தியா மண்டபம் தொடர்பாக பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், இந்து அறநிலையத்துறை சட்டத்துக்கு எதிராக அயோத்தியா மண்டபத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் வந்தது. இதையடுத்து 2013ல் சிவசுப்பிரமணிய கோயில் செயல் அலுவலர் அயோத்தியா மண்டபத்தின் தக்கராக நியமிக்கப்பட்டார். தக்கர் நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஸ்ரீராம சமாஜத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். ஆய்வின்போது அயோத்தியா மண்டபத்தில் இருந்தவர்கள் பூட்டுப்போட முயன்றனர்.

சிலர் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது.  அயோத்தியா மண்டபத்தில் திருமண மண்டபம், காரிய கொட்டகை ஆகியவற்றுக்கு அதிக கட்டணம் வசூல் என புகார் எழுந்தது. இந்தியாவிலேயே குளு குளு ஏசி வசதியுடன் உள்ள காரிய கொட்டகை அயோத்தியா மண்டபத்தில் தான் உள்ளது. ஒரு சதுர அடிக்கு ரூ.60 வசூலிக்கப்படுகிறது; ஒரு குறிப்பிட்ட கூட்டம், பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அயோத்தியா மண்டபத்தில் சிலை இல்லை என தெரிவிக்கப்பட்டது; ஆனால் சிலைகள் உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Related Stories: