×

சென்னை மற்றும் 4 மாவட்டங்களில் போலி பட்டா மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்கள் மீட்கப்படும்: பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமசந்திரன் உறுதி

சென்னை: சென்னை மற்றும் சுற்றில் உள்ள 4 மாவட்டங்களில் போலி பட்டா மூலமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்கள் மீட்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமசந்திரன் உறுதியளித்திருக்கிறார். போலி பட்டாக்கள் மூலம் நகர்ப்புறங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் அரசு நிலங்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமசந்திரன், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் போலி பட்டாக்கள் இருப்பதாகவும், பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இதற்கு முன்பாக அரசு கவனத்திற்கு வந்த நிலையில், 92 ஏக்கர் நிலம் மீட்கப்படத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர், இதுபோல வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு நிலங்கள் பற்றி அரசு கவனத்திற்கு கொண்டு வந்தால் அதன்மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களை அகற்றி அங்கு அரசு கட்டிடங்களை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவையில் அமைச்சர் குறிப்பிட்டார்.


Tags : Chennai ,Minister ,KKSS ,Ramachandran , Chennai, Fake Patta, Government Land, Minister KKSS. Ramachandran
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் மனு