தஞ்சையைச் சேர்ந்த ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை.. கூட்டாளி 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு!!

சென்னை : தஞ்சையைச் சேர்ந்த ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தஞ்சையைச் சேர்ந்த பிரபல ரவுடி கட்டை ராஜா, பட்டீஸ்வரம், கும்பகோணம், உள்ளிட்ட பல பகுதிகளில் பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார். இவர் மீது 16 கொலை வழக்குகள் உள்ளது.  இதனிடையே 2013ம் ஆண்டு கும்பகோணம் திப்பிராஜபுரம் அருகே சென்னியமங்கலத்தில் செந்தில்நாதன் என்பவரை கொலை செய்த நிலையில் கட்டை ராஜா தலைமறைவானார். தொடர்ந்து பல ஆண்டுகளாக தேடி வந்த போலீசார், கட்டை ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், மேற்கண்ட கொலை வழக்கில் அனைத்து வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று கும்பகோணம் விரைவு நீதிமன்ற நீதிபதி பெஞ்ஜமின் ஜோசப்  தீர்ப்பை வழங்கியுள்ளார். அவர் வழங்கி உள்ள தீர்ப்பில்,ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும் கட்டை ராஜாவின் கூட்டாளிகளான தாய் மாமன் ஆறுமுகம் மற்றும் தம்பி செல்வம் ஆகியோருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

Related Stories: