திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் டோக்கன் விநியோகம் : போலீசார் பக்தர்கள் இடையில் தள்ளுமுல்லு

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் இலவச தரிசனம் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று திருமலை தேவஸ்தானம் அறிவித்தது. நாளொன்றுக்கு 30,000 டோக்கன் மட்டுமே வழங்கப்படும் நிலையில் முதல் மூன்று நாட்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டுவருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் இரண்டு நாட்கள் தங்கி டோக்கன் வாங்க இருந்தபோது இலவச தரிசன டோக்கன் கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் டோக்கன் விநியோக கவுண்ட்டருக்குள் அதிரடியாக நுழைய முயன்ற பக்தர்கள் வரிசையில் நிற்காமல் உள்ளே நுழைய முயன்றவர்களை தடுத்து நிறுத்திய போலிஸ்சார் பக்தர்களை விரட்டியடிக்கும் முயற்சியின் போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. இலவச தரிசனம் டோக்கன் பெற 2 நாட்களாக காத்திருப்பதாக பொதுமக்கள் வேதனை.

திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்துக்கு வரும் பொதுமக்களுக்கு மலைஅடிவாரம், ரயில் நிலையம் மற்றும் பேருந்துநிலையம் ஆகிய மூன்று இடங்களில் இலவச தரிசனத்துக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 30,000 டோக்கன் வழங்கப்பட்டு தரிசனத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை அதிகமான பக்தர்கள் வருகையின் காரணமாக மூன்று நாட்களுக்கு கொடுக்கப்படும் 90,000 டோக்கன்களை ஒரே நாளில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த மூன்று நாட்களுக்கு டோக்கன் கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தேவஸ்தானம் அறிவித்தது . இதனை அறியாத சிலர் இலவச டோக்கன் பெறுவதற்காக இரவில் இருந்து அந்த டோக்கன் கவுண்டரில் காத்திருந்தனர். இதையடுத்து காலை 6 மணிக்கு டோக்கன் வழங்கியபோது வரிசையில் இருந்த பக்தர்களை தவிர வெளியில் இருந்த பொதுமக்கள் அனைவரும் உள்ளே நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, போலீசாருக்கும் பொதுமக்களும் இடையில் தள்ளுமுல்லு  ஏற்பட்டது

Related Stories: