×

சென்னை ஐஐடி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு : சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!!

சென்னை: சென்னை ஐஐடியில் படித்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை, தன்னுடன் பயின்ற சக ஆராய்ச்சி மாணவன் கிங்ஷீக்தேவ் சர்மாவால், 2017ம் ஆண்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளானார். மேலும், தன் நண்பர்களான சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து மாணவியை தொடர் கூட்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, கடந்த 2021 மார்ச் 29ம் தேதி தேசிய மகளிர் ஆணையத்திலும், கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். எனினும் இந்த வழக்கு மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. மாணவி அளித்த புகாரின் படி ஐஐடி ஆராய்ச்சி மாணவர்களான கிங்ஷீக்தேவ் ஷர்மா, சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ, டாக்டர் ரவீந்திரன், எடமன பிரசாத், நாராயண் பத்ரா, சவுர்வ தத்தா, அய்யன் பட்டாசார்யா ஆகிய 8 பேர் மீது ஐபிசி 354, 354(பி), 354(சி), 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் மாதர் சங்கத்தின் அழுத்தத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்ய சென்னை மயிலாப்பூர் போலீசார் மேற்குவங்கம் விரைந்தனர்.  கொல்கத்தாவில் தலைமறைவாக இருந்த கிங்ஷுகு தேப்சர்மாவை போலீசார், கடந்த மாதம்  கைது செய்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அங்கு அவர் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்ற உத்தரவை காண்பித்த நிலையில் அவரை  நீதிமன்றம் விடுதலை செய்தது.இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை மயிலாப்பூர் காவல்துறையிடமிருந்து  சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : Chennai ,IIT ,Zylendra Babu , Chennai, IIT, Student, Sexual, Violence, CBCID
× RELATED சில்லி பாயின்ட்…