×

அரசு தொடக்கப் பள்ளிகளில் ரூ.150 கோடியில் 7500 திறன் வகுப்பறைகள்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப் பேரவையில் பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கை மீது நேற்று நடந்த விவாதத்துக்கு பிறகு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்புகள்:
* தமிழ்நாட்டில் அனைத்து  அரசு தொடக்கப் பள்ளிகளிலும் 2022-2023 கல்வி ஆண்டில் 7500 திறன் வகுப்பறைகள்(Smart Classes), ₹150 கோடியில் உருவாக்கப்படும்.
* கல்வி, கவின்கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சென்னையில் ₹7 கோடி மதிப்பில் சீர்மிகு பள்ளி(School of Excellence) அமைக்கப்படும்.
* நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டு பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய பள்ளிக் கல்விக் கட்டிடங்கள் அவற்றின் தனிச் சிறப்பு மாறாமல் புதுப்பிக்கப்படும்.  
* சிறந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது ஒவ்வொரு ஆண்டும் 100 பேருக்கு விருதும், பள்ளிக்கு ₹10 லட்சம் ஊக்க நிதியும் வழங்கப்படும்.
* அரசுப் பள்ளி மாணவர்கள் தொழில் நுட்ப அறிவு, கணினி மொழி மீதான  ஆர்வத்தை ஏற்படுத்த கணினி நிரல் மன்றங்கள்(Computer Coding Club), ரோபோடிக் கற்றுக் கொள்ள  எந்திரனியல் மன்றங்கள்(Robotics Club), பள்ளிகளில் ஏற்படுத்தப்படும்.
* அரசு மேனிலைப் பள்ளி கணினிப் பிரிவு மாணவர்களிடம் வசூலிக்கப்படும் ₹200  தனிக் கட்டணம்  முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். அரசுக்கு ₹6 கோடி செலவாகும்.
* பல குறைபாடுகள் காரணமாக பள்ளிக்கு வர இயலாத 10 ஆயிரத்து 146 மாற்றுத் திறனாளிமாணவர்களுக்கு  கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளை அவர்களின் வீடுகளில் நேரடியாக அளிக்க ₹8 கோடி 11 லட்சம் செலவில் திட்டம் செயல்படுத்தபடும்.
* மெய்நிகர் நூலகம் ₹57.20 லட்சம் செலவிலும், ₹23.40 லட்சம் செலவில் வை-பை வசதியும் ஏற்படுத்தப்படும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஒருங்கிணைப்பில் சர்வதேச அளவில் பல்துறை நிபுணர்கள்,அ றிவியல் ஆய்வாளர்கள் மற்றும் புகழ் பெற்ற அறிஞர்களின் உரைகளை மிகச் சிறந்த தொழில் நுட்பம் மற்றும் அரங்க  அமைப்புடன் TN Talk  என்ற பெயரில் நடத்தப்படும்.

Tags : Minister of School Education , 150 crore 7500 capacity classrooms in government primary schools: Announcement by the Minister of School Education
× RELATED திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 5...