மாநெல்லூரில் ரத்ததான முகாம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ரத்த தான முகாம் நடந்தது. இதில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ கலந்துகொண்டார். கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூரில் தனியார் அறக்கட்டளையின் 3ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் துணை வட்டாட்சியர் சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், மாநெல்லூர் ஊராட்சி தலைவர் லாரன்ஸ்,  மாவட்ட கவுன்சிலர் சாரதாம்மா முத்துசாமி, மாதர்பாக்கம் மனோகரன், அறக்கட்டளை நிர்வாகிகள் யுவராஜ், ரைப்பட நடிகர் சம்பத்ராம், ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

இந்நிகழ்ச்சியில், டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்று, ரத்த தான முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டார். இம்முகாமில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் நிறைமதி தலைமையில் மருத்துவ குழுவினர் பங்கேற்று, ரத்த தானம் தர வந்தவர்களை பரிசோதித்து ரத்தம் சேகரித்தனர். இதில் 146 பேர் ரத்த தானம் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: