திரிணாமுல் நிர்வாகி, நண்பர்கள் கூட்டு பலாத்காரத்தால் சிறுமி பலி தலைமை செயலாளரிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர்

கொல்கத்தா: மேற்கு வங்கம் நாடியா மாவட்டம் ஹன்ஸ்காலி பஞ்சாயத்து உறுப்பினர் சமர் கோலா மகன் பிரஜ்கோபால் கோலா(21). திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். விழாவுக்கு அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியையும் அழைத்துள்ளார். அப்போது மது போதையில் இருந்த பிரஜ்கோபால் மற்றும் அவரது நண்பர்கள் சிறுமிக்கும் மதுவை ஊற்றி கொடுத்தனர். பின்னர் அவர்கள் அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தனர். இதன் பிறகு அதிக ரத்து போக்கு காரணமாக கடந்த 5ம் தேதி சிறுமி உயிரிழந்தார்.

பின்னர், சிறுமியின் பெற்றோரை பிரஜ்கோபாலி மிரட்டியதால் யாருக்கும் தெரியாமல் சடலத்தை எரித்து விட்டார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து பிரஜ்கோபால் நண்பர்கள் 4 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றக்கோரி பல்வேறு அமைப்புகள் கவர்னர் மாளிகையை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சூழலில் சிறுமி உயிரிழப்பு சம்பவம் பற்றி உடனே அறிக்கை அளிக்கும்படி தலைமை செயலாளருக்கு ஆளுனர் ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார்.

* கன்னத்தில் அறைந்ததால் பலி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ‘‘யாரோ ஒருவர் கன்னத்தில் அறைந்ததால் தான் சிறுமி கீழே விழுந்து மரணமடைந்தார் என்று கூறப்படுகிறது. பிரஜ்கோபாலுடன் இருந்த தொடர்பினால் சிறுமி கர்ப்பம் அடைந்தார் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 5 நாட்களுக்கு பின் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தது ஏன்’’ என்று கேள்வி எழுப்பினார்.

Related Stories: