×

ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தல் 1 கோடி போதைப்பொருள் நடுக்கடலில் பறிமுதல்: 3 பேர் படகுடன் கைது

ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி கடல் பகுதியில் வடக்கு இலங்கை கடற்படை பிரிவைச் சேர்ந்த கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நெடுந்தீவு கடல் பகுதியில் ரோந்து சென்றபோது நடுக்கடலில் 3 படகுகள் சென்றுள்ளது. கடற்படையினர் 3 படகுகளையும் துரத்தி சென்றபோது ஒரு படகு மட்டும் தனியாக சென்றுள்ளது. சந்தேகமடைந்த கடற்படையினர் படகை துரத்திச் சென்று வழிமறித்து சோதனை செய்தனர். படகில் ஒரு கிலோ எடையுள்ள கிரிஸ்டல் மெத்தபெடமைன் போதைப்பொருள் இருந்துள்ளது. போதைப்பொருளை கைப்பற்றிய கடற்படையினர் படகில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் தலைமன்னார் மாவட்டம், பூனேரி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், ராமேஸ்வரத்தில் இருந்து படகில் போதைப்பொருளை கடத்தி வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்தனர். 3 பேரையும் கைது செய்த கடற்படையினர் படகை பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பின் போதைப்பொருளும், 3 பேரும் இலங்கை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாயாகும்.


Tags : Rameswaram ,Sri Lanka ,Mediterranean , 1 crore drug smuggled from Rameswaram to Sri Lanka Seized in Mediterranean: 3 arrested with boat
× RELATED இலங்கைக்கு கடலில் நீந்த முயன்ற கர்நாடக வீரர் சாவு