வீரப்பன் அண்ணனுக்கு 3 நாள் பரோல்

சேலம்: சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் (76). இவர் சத்தியமங்கலம் அருகே பங்களாபுதூர் காவல்நிலையத்தில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று 34 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் 3 நாள் பரோல் கேட்டு சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாரிடம் மனு கொடுத்தார். மனுவை ஆய்வு செய்த அவர், மாதையனுக்கு 3 நாள் பரோல் வழங்கினார். இதையடுத்து நேற்று காலை சொந்த ஊருக்கு மாதையனை உறவினர்கள் அழைத்துச் சென்றனர்.

Related Stories: