×

முருகன் கோயிலில் பங்குனி உற்சவ திருவிழா: உடலில் மிளகாய் சாந்து பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்

வானூர்: வானூர் தாலுகா ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையம் கிராமத்தில் உள்ள சிங்காரவேல்முருகன் கோயிலில் பங்குனி மாத 32ம் ஆண்டு பங்குனி உற்சவ திருவிழா நேற்று காலை துவங்கியது. இதனையொட்டி காவடி வீதியுலாவும், செடல் உற்சவமும் நடந்தது. இதில் பக்தர்கள் 100 உயரத்தில் கிரேன் மூலம் அமைக்கப்பட்ட செடலில் அலகு குத்தி தொங்கியபடி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

மதியம் கஞ்சி வார்த்தல் நடைபெற்றது. மாலையில் விரதமிருந்த பக்தர்கள் 3 பேர் தங்கள் உடலில் மிளகாய் சாந்து பூசி சுவாமியை வணங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து நடந்த தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீயில் இறங்கி நடந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Panguni festival ,Murugan Temple ,Chilli Chandhi , Panguni Festival at Murugan Temple
× RELATED மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா