×

பொது வாழ்க்கையில் 55 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு இந்தியாவின் நம்பர் 1 முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், தமிழக அரசின் பட்ஜெட் விளக்கியும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்து பெற்றிப்பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று மாலை 6 மணிக்கு மறைமலைநகரில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பட்ஜெட் விளக்கியும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும் சிறப்புரையாற்றினார். முன்னதாக விழாவில் கலந்துகொண்ட முதல்வருக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வெள்ளி செங்கோல் வழங்கினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 55 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவில் இதுபோல் யாரும் பொது வாழ்க்கையில் உழைப்பவர்கள் கிடையாது. உழைப்பு, திறமை, தியாகம் ஆகியவற்றை ஒருங்கே பெற்று இந்தியாவின் நம்பர் 1 முதல்வராக திகழ்கிறார்.
இவ்வாறு அமைச்சர் பேசினார். சிறுவேடல் செல்வம் எம்பி பேசும்போது, ‘’முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவுக்கே வழிகாட்டும் தலைவராக திகழ்கிறார். 2024ம் ஆண்டு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றும் தலைவராக இருப்பார்.

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்திருந்தபோது அனுபவமிக்க பல முதல்வர்களை உருவாக்கிய எம்பிக்கள் எல்லாம் சந்தித்து வாழ்த்தும் தெரிவித்தனர். வாழ்த்தும் பெற்றனர். இந்த சம்பவம் இந்தியாவே திரும்பிப் பார்க்க வைத்தது’ என்றார். செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் பேசும்போது,’’திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் வேளாண்மைக்கு தனி பட்ஜெட், மகளிருக்கு பஸ்சில் இலவச பயணம், கூட்டுறவு கடன் தள்ளுபடி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களை நிைறவேற்றியுள்ளார்.

சிங்கபெருமாள் கோவில் பகுதியில் 12 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக முதல்வருக்கு தொகுதி மக்கள் சார்பிலும் என் சார்பிலும் கோடானகோடி நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.  செங்கல்பட்டு தொகுதிக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்ததற்காகவும் முதல்வருக்கு நன்றி, பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்’ என்றார். முன்னதாக மறைமலைநகர் நகர செயலாளரும் நகராட்சி தலைவருமான வெ.சண்முகம், முதல்வரை வரவேற்று பேசினார். முன்னாள் எம்எல்ஏ மூர்த்தியின் பேரனுக்கு அன்பழகன் என்று முதல்வர் பெயர் சூட்டினார்.

Tags : India ,KKA ,Stalin ,Minister ,Da. Mo. Anfreassan , MK Stalin has been India's No. 1 Chief Minister for over 55 years in public life: Minister Thamo Anparasan
× RELATED இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலையை...