×

மதுவிருந்துடன் நடந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தலையில் கல்லைபோட்டு ரவுடி கொலை: நண்பர்கள் 3 பேர் கைது

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையில் நேற்றிரவு செல்போன் தகராறில் ஏற்பட்ட மோதலில் ஒரு ரவுடியை அவரது நண்பர்கள் 3 பேர் சரமாரி தாக்கி, தலையில் கல்லை போட்டு கொன்றனர். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.   சென்னை கொருக்குப்பேட்டை, பாரதி நகர், ஹவுசிங் போர்டு, பி பிளாக் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (எ) அமுக்கான் ரமேஷ் (22). ரவுடி. இவர்மீது வழிப்பறி, செல்போன் மற்றும் நகை திருட்டு, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் உள்ளது. இவரது நண்பர் ஆனந்த் (23). இவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால், தனது செல்போன் பறிப்பு கும்பலை சேர்ந்த நண்பர்களான அரவிந்தன் (21), உதயா (எ) உதயகுமார் ஆகியோருடன் அமுக்கான் ரமேஷ் மதுவிருந்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

  இந்நிலையில், நேற்றிரவு 11.30 மணியளவில் குடிபோதையில் தனது தம்பி ராஜேஷின் செல்போனை ஏன் திருடினாய் என அமுக்கான் ரமேஷிடம் உதயா கேட்டிருக்கிறார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது உதயா, அவரது நண்பர் வண்ணாரப்பேட்டை முத்தையா மேஸ்திரி தெருவை சேர்ந்த முகமது அப்துல்லா (22), அரவிந்தன் ஆகிய 3 பேரும் சேர்ந்து, அமுக்கான் ரமேஷை இரும்பு ராடு மற்றும் உருட்டு கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்ததும். அவரது தலையில் 3 பேரும் சேர்ந்து பெரிய கல்லை தூக்கி போட்டுவிட்டு தப்பி சென்றனர். இச்சம்பவத்தில் அமுக்கான் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் விசாரித்தனர். கொலை வழக்குப்பதிவு செய்து, இன்று அதிகாலை தண்டையார்பேட்டை, சுவாதி நகரில் பதுங்கியிருந்த அரவிந்தன் (21), முகமது அப்துல்லா (22) ஆகிய இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், தலைமறைவான முக்கிய குற்றவாளி உதயா (எ) உதயகுமாரை இன்று காலை தனிப்படயினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.


Tags : Rowdy , With wine, dil, stone, murder
× RELATED குண்டர் சட்டத்தில் ரவுடி கைது