×

வேதாரண்யத்தில் மழை உப்பு உற்பத்தி பாதிப்பு-உப்பளத் தொழிலாளர்கள் வேலை இழப்பு

வேதாரண்யம் : வேதாரண்யத்தில் பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உப்பளத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய கிராமங்களில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு உப்பு உற்பத்தி தொடக்கத்திலிருந்து மழை பெய்ததால் மூன்று முறை உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு கடந்த வாரத்திலிருந்து உப்பு உற்பத்தி நடைபெற்று வந்தது.

மீண்டும் நான்காவது முறையாக தற்போது மழை பெய்து வருவதால் உப்பு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் மீண்டும் உப்பு உற்பத்தி துவங்க சில நாட்கள் ஆகும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். உப்பளங்கள் நீரில் சூழ்ந்துள்ளதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உப்பு ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உப்பளத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். ஆனால், இந்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடும் வெயில் நிலவி வந்த நிலையில் இந்த மழை பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது.

மழையளவு

வேதாரண்யத்தில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை 11.6 மி.மீ மழையும், கோடியக்கரையில் 19 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Tags : Vedaranyam , Vedaranyam: Salt production in Vedaranyam has been affected by heavy rains. Thus job opportunities for salt workers
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்