பாக்கெட் சாராய சாம்ராஜ்யம்:7 பேர் கைது:பொதுமக்கள் நிம்மதி

திருப்பத்துர்: திருப்பத்துர் மாவட்டம் வாணியம்பாடி சுற்று வட்டாரத்தில் கடந்த 27 ஆண்டுகளாக கள்ள சாராய விற்பனையில் ஈடுப்பட்ட மகேஸ்வரி-யை போலீசார் அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள். திருப்பத்துர் மாவட்டம் வாணியம்பாடியில் மகேஸ்வரி என்ற பெண் சினிமாவில் வரும் தாதா போல சண்டியர்தனம் செய்து கொண்டு அப்பகுதியில் ஸ்பிரிட் எனப்படும் எரி சாராயத்தை  சிறு சிறு பாக்கெட்களில் விற்று வந்தார் அன்றாட கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கையில் கிடைக்கும் பணத்துக்கு பாக்கெட் சாராயத்தை வாங்கி குடித்துவிட்டு  வீட்டில் வந்து ரகளை செய்வது வழக்கம். இரவு பகல் என்று பாராமல் எந்த நேரமும் கிடைக்கும் இந்த பாக்கெட் சாராயம் குறித்து போலீசில் புகார் அளிக்கும் இளைஞர்கள் தொடர்ந்து மிரட்டபட்டார்கள் என்றும், சிலர் தாக்கப்பட்டார் என்றும், ஒரு சிலர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள். கள்ளச்சாராயம் விற்று வந்த மகேஸ்வரி மீது 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஏழு முறை அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு திருவிழா கூட்டத்தில் கள்ளச்சாராயம் விற்றவர்களைத் தட்டி கேட்க முயன்ற இளைஞர்கள் மீது மகேஸ்வரியின் ஆட்கள் தாக்குதல் நடத்தவே  இதனை கண்டித்து வாணியம்பாடி நேதாஜி நகர் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அங்குள்ள  சாராய பாக்கெட்கள் அடங்கிய மூட்டையை போலீசார் கொண்டு செல்லும் போது மகேஸ்வரி கும்பலை கைது செய்தால்தான் சாராய பாக்கெட்டுகளை விடுவிப்போம் என போலீசுடன் வாக்குவாதம் . போராட்டம் அதிகரிக்க தொடங்கியதால் வேலூர் சரக டி.ஐ .ஜி.  ஆனி விஜயா வாணியம்பாடி சென்று மகேஸ்வரி மீதான வழக்குகள் குறித்து கேட்டறிந்தார். அதன் பிறகு அவரை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து டி .எஸ்.பி சுரேஷ் பாண்டி தலைமையிலான போலீசார் மகேஸ்வரியை பிடிக்க களமிறங்கினர். மகேஸ்வரி திருவண்ணாமலையில் பதுங்கி இருப்பது தெரியவந்ததும் அங்கு சென்ற தனிப்படை விடிய விடிய தேடி மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் சீனிவாசன் உட்பட 7 பேரை கைது செய்தனர். மகேஸ்வரியின் கும்பலின் கைதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்து இருக்கிறார்கள்.

Related Stories: