×

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜின் கோரிக்கை குறித்து சிபிசிஐடி பதிலளிக்க ஜூன் 7 வரை அவகாசம் அளித்து மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜின் கோரிக்கை குறித்து சிபிசிஐடி பதிலளிக்க ஜூன் 7 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. சிபிசிஐடி ஒருவாரம் அவகாசம் கேட்ட நிலையில் வழக்கை ஜூன் 6-க்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.    பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் 2015-ம் ஆண்டு தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் யுவராஜ், அருண் ஆகிய இருவருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதாவது சாகும் வரையில் சிறை தண்டணை விதிக்கப்பட்டது. மேலும் குமார், சதிஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சந்திரசேகரன் என்பவருக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன் யுவராஜ் உள்ளிட்டோருக்கு அடைக்கலம் கொடுத்தால் பிரபு மற்றும் கிரிதர் ஆகிய இருவருக்கும் ஆயுள் மற்றும் கூடுதலாக 5 ஆண்டுகளுடன் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் குற்றவாளிகள் 10 பேரும் தங்களது தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

Tags : Kokulraj ,CPCID ,Yuaraj , Gokulraj, murder, Yuvraj, demand, CPCIT
× RELATED கோகுல்ராஜ் ஆணவ கொலையில் ஆயுள் தண்டனை...