×

பிரான்ஸ் அதிபர் தேர்தல் : முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் இமானுவேல் மேக்ரான் முன்னிலை

பாரீஸ்: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் இமானுவேல் மேக்ரான் முன்னிலை வகித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் அதிபராக இருக்கும் இமானுவேல் மேக்ரான் 2வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இதில் 12 அதிபர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருந்த போதிலும், மேக்ரான், மரீன் லா பென், ஜீன் லுக் மெலன்சோன் ஆகியோர் மட்டுமே அனைவருக்கும் தெரிந்த பிரபலங்கள்.அதிபர் தேர்தலின் முதல் சுற்றுக்கான வாக்கு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது. பெரிய நகரங்களில் மட்டும் கூடுதலாக ஒரு மணி நேரம், அதாவது இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.

பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. களத்தில் இருந்த 12 வேட்பாளர்களில் இமானுவேல் மேக்ரான் 28.50% வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்தார். அவருக்கு மிக நெருக்கமாக வலது சாரி வேட்பாளர் மரைன் லீபென் 24.20% வாக்குகளை பெற்றுள்ளார். இதையடுத்து தொண்டர்களிடம் பேசிய இமானுவேல், 2ம் கட்ட தேர்தலுக்காக கடினமாக உழைக்க வேண்டும் என்றார். இதையடுத்து முதல் 2 இடங்களை பிடித்த அதிபர் வேட்பாளர்களுக்கான 2ம் கட்ட தேர்தல் வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரான்ஸ் வாக்காளர்கள் அனைவரும் மீண்டும் வாக்களிப்பர். அதிபர் மேக்ரானுக்கு மிக நெருக்கமாக வலதுசாரி வேட்பாளர் மரைன் இருப்பதால் பிரான்ஸ் அதிபருக்கான 2ம் கட்ட தேர்தல் முடிவுகள் மதில் மேல் பூனை போல எந்த பக்கமும் பாயலாம் என்ற சூழல் நிலவுகிறது. எனவே அடுத்த 15 நாட்களில் தம்முடைய தேர்தல் பரப்புரையை மேலும் தீவிரப்படுத்த அதிபர் இமானுவேல் திட்டமிட்டுள்ளார்.


Tags : France ,Emanuel Macron , France, President, Election, Emanuel Macron, Front
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...