கோயில் நிலத்தை மீட்க கோரி வைரல் வீடியோ இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆய்வு

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியான காமராஜர் சாலையில் இந்து திருக்கோயில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் அதனை மீட்க உதவி கோரி ஒரு வீடியோ வைரல் ஆனது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்து ரத்தினவேலு மற்றும் ஆய்வாளர் கிருத்திகா ஆகியோர் இது குறித்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து அப்பகுதியினை நிர்வகித்து வரும் நபர்களிடமிருந்து விளக்கங்களையும் சில தடை ஆணை நகல்களையும் நகல்களையும் பெற்று சென்றுள்ளனர்.

இதுகுறித்து அங்கிருந்த நிர்வாகி கணபதி கூறுகையில் , இப்பகுதி சுமார் 20 ஆயிரம் சதுர அடியை கொண்டது எனவும் இது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் இது எங்கள் மூதாதையர்கள் சமாதி அமைந்த இடமும், இதை தனி நபர்கள் வழிபட அனுமதி இல்லை எனவும் புகைப்படங்கள் வீடியோக்களை எடுக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்தார்கள்.

இப்பகுதியை கல் மடம் என தெரிவித்து லிங்காயத்து எனக்கூறப்படும் பிரிவை சார்ந்தவர்கள் தினந்தோறும் இங்குள்ள ஈஸ்வர லிங்கத்திற்கு பூஜை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

  இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு முறையான விளக்கங்களை அளித்துள்ளதாகவும் சரியான புரிதல் இல்லாமல் இந்த வீடியோ வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் கூறுகையில், இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories: