×

அஜித் குமார் படம் ஐதராபாத்தில் தொடக்கம்

சென்னை: அஜித் குமாரின் 61வது படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்குகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித் குமார். தற்காலிகமாக ‘ஏகே 61’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் இன்று ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இதற்காக பிரமாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 2 வாரங்கள் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக அஜித் குமார் நேற்று விமானம் மூலம் ஐதராபாத் சென்றார். அப்போது அஜித் குமாருடன் விமான ஊழியர்கள் எடுத்துக்கொண்ட செல்பி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. 


Tags : Ajith Kumar ,Hyderabad , Ajit Kumar, Hyderabad,
× RELATED மே 1ம் தேதி மறு ரிலீசாகிறது மங்காத்தா