×

சிரஞ்சீவி படத்தில் நடிகரான இயக்குனர்

ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா, சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், அனன்யா பாண்டே நடிக்கும் லைகர் என்ற பான் இந்தியா படத்தை இயக்கி முடித்துள்ள புரி ஜெகன்நாத், இதையடுத்து மீண்டும் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஜன கண மன என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், சிரஞ்சீவி படத்தில் அவர் நடிகராக அறிமுகமாகிறார்.
மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம், லூசிஃபர். இப்படம் தெலுங்கில் மோகன்ராஜா இயக்கத்தில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.

இதில் சிரஞ்சீவி, நயன்தாரா நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கிறார். சமீபத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டது. இந்நிலையில், முக்கிய வேடத்தில் இயக்குனர் புரி ஜெகன்நாத் நடிப்பதை சிரஞ்சீவி உறுதி செய்துள்ளார். தெலுங்கில் சிறுத்தா என்ற படத்தில், சிரஞ்சீவி மகன் ராம் சரணை ஹீரோவாக அறிமுகம் செய்தவர் புரி ஜெகன்நாத் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chiranjeevi , Chiranjeevi, actor, director
× RELATED திருத்தணி அருகே வாகன சோதனையின்போது ரூ.25.90 லட்சம் பறிமுதல்..!!