கிசுகிசுக்கள் பரவி வரும் நிலையில் மீண்டும் பிரபாஸ் ஜோடியாக அனுஷ்கா

ஐதராபாத்: பான் இந்தியா நடிகராக மாறியுள்ள பிரபாஸ், தன்னுடன் இணைந்து நடித்த அனுஷ்காவை காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியானது. இதை இருவரும் மறுத்தனர் என்றாலும், இருவரது பெற்றோரும் இதுகுறித்து எதுவும் பேசவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அனுஷ்காவுக்கு அவரது பெற்றோர் தீவிரமாக மணமகன் தேடி வருகின்றனர். சமீபத்தில் பிரபாஸ் தனது திருமணம் பற்றி கூறுகையில், ‘நல்ல பெண் கிடைத்தால் திரு

மணம் செய்வேன்’ என்று சொன்னார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் பிரபாஸ், அனுஷ்கா இணைந்து நடித்தனர். அதற்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் வெளியான படம், நிசப்தம். தமிழில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியானது. 2020ல் வெளியான இப்படத்தை தொடர்ந்து புதுப்படத்தில் நடிக்காமல் இருந்த அனுஷ்கா, தற்போது தன் உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

நவீன் பொலிஷெட்டி நடிக்கும் பான் இந்தியா படத்தில், வயது முதிர்ந்த பெண் கேரக்டரில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், மாருதி இயக்கும் ராஜா டீலக்ஸ் என்ற படத்தில், பிரபாஸ் ஜோடியாக அனுஷ்கா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Related Stories: