30 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு மகேஷ் பாபு உதவி

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது தந்தையும், பிரபல நடிகருமான கிருஷ்ணா பெயரில் நடத்தும் அறக்கட்டளை மூலம் பல்ேவறு உதவிகள் செய்து வருகிறார். இந்த அறக்கட்டளையை மகேஷ் பாபு மனைவியும், முன்னாள் நடிகையுமான நம்ரதா ஷிரோத்கர் நிர்வகிக்கிறார். சமீபத்தில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தலா ஒரு கிராமத்தை தத்ெதடுத்த மகேஷ் பாபு, அங்கு வசிக்கும் மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கினார்.

மேலும், 30 குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி செய்தார். இதுகுறித்து நம்ரதா ஷிரோத்கர் கூறுகையில், ‘உலக சுகாதார தினத்தையொட்டி, 30 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையறிந்த ஆளுநர் எங்களைப் பாராட்டினார். தரமான மருத்துவ சிகிச்சை வழங்கிய ஆந்திர மருத்துவமனை மருத்துவக் குழுவுக்கு நன்றி’ என்றார்.

Related Stories: