ஆந்திராவில் ஜெகன் அமைச்சரவை மாற்றம் பிரபல நடிகை ரோஜா உட்பட 15 பேருக்கு அமைச்சர் பதவி: இன்று பதவியேற்பு

திருமலை: ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் முதல்வராக பதவியேற்றபோது, தனது அமைச்சரவையில்  இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு  புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி, கடந்த வாரம் முதல்வர் ஜெகன் மோகன் அமைச்சரவையில் இருந்த 24  அமைச்சர்களும் தங்களின் ராஜினாமா கடிதங்களை வழங்கினர். ஏற்கனவே ஒரு அமைச்சர் இறந்துவிட்டதால், 25 அமைச்சர் பதவிகள் காலியானது.

இந்நிலையில், பழைய அமைச்சர்கள் 10 பேருக்கு தொடர்ந்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், நடிகை ரோஜா உட்பட புதியவர்கள் 15 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான துறைகள் பதவியேற்கும் போது அறிவிக்கப்பட உள்ளது. அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் புதிய அமைச்சர்களுக்கு இன்று காலை 11 மணிக்கு கவர்னர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்திரன் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

* மாற்றி அமைக்கப்பட்டு உள்ள புதிய அமைச்சரவையில் குண்டூர், என்டிஆர், பிரகாசம், அன்னமய்யா, விசாகப்பட்டினம், அல்லூரி, திருப்பதி, ராஜம்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் இருந்து ஒருவருக்கு கூட அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

Related Stories: