×

பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டணம் உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: அரசுக்கு நன்றி தெரிவித்து மாணவர்கள் மகிழ்ச்சி

திருச்சி:பாரதிதாசன்  பல்கலைக்கழகம் சமீபத்தில் தேர்வுக்குழு மூலம் மாணவர்களுக்கு தேர்வுக்  கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு, ஆட்சி மன்றக்குழு ஒப்புதல் பெற்று ஏப்ரல்  மாதம் முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் தங்களது  பொருளாதார நிலையை சுட்டிக்காட்டி கட்டண உயர்வை குறைக்கும்படி கோரிக்கை  விடுத்தனர். இளநிலை மற்றும் முதுநிலை பாடங்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட  தேர்வு கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் மாணவர்கள் நலன் கருதி  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டண  விவரங்கள் தற்ேபாது நடைபெற உள்ள தேர்வுக்கும் தொடரும். மாணவர்கள், ஆசிரியர்கள்  கோரிக்கை, கல்வித்துறை செயலர் அறிவுறுத்தியதை அடுத்து இந்த கட்டண உயர்வை  நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து  மாணவர்கள் கூறுகையில், ‘‘. எங்களது கோரிக்கையை ஏற்று தேர்வு கட்டண  உயர்வை நிறுத்தி வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த  தமிழக முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு நன்றி’’ என்றனர்.

Tags : Bharathi Dasan University , Bharathidasan University., Examination Fees, Students
× RELATED பாரதிதாசன் பல்கலையில் இடஒதுக்கீடு...