சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரிக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய குழு மற்றும் பொலிட் பீரோவிற்கு வாழ்த்துகள். ஜனநாயகத்தை பாதுகாக்க, கண்ணூர் மாநாடு அடிப்படைவாத சக்திகளுக்கு எதிராக ஒரு கூட்டு முன்னணியைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
