சித்திரை திருவிழாவுக்காக வைகை அணை இன்று திறப்பு

ஆண்டிபட்டி: மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. வரும் 16ம் தேதி அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து இன்று மாலை 6 மணி முதல் 16ம் தேதி காலை வரை மதுரை சித்திரை திருவிழாவிற்காக தண்ணீர் திறக்கப்படும். தொடக்கத்தில் 750 கனஅடி தண்ணீர்  திறக்கவும், அடுத்தடுத்த நாட்களில் தண்ணீர் விரைவாக செல்வதற்காக அதிகமான தண்ணீர் திறந்து விடவும் வாய்ப்புள்ளது. மொத்தம் 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: