×

சதுரங்க வேட்டை பட பாணியில் போலி இரிடியம் தயாரித்து மோசடி என்எல்சி அலுவலர் உள்பட இருவர் கைது

பண்ருட்டி: சதுரங்க வேட்டை சினிமாவில் வீட்டுக்குள் இரிடியம் வைத்தால் பல நன்மைகள், பதவிகள் கிடைக்கும் தொட முடியாத அளவிற்கு பெருமை சேர்க்கும் என்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதை நம்பி பலகோடி ரூபாய் ஏமாந்த சினிமா தயாரிப்பாளர், நடிகைகள் உண்டு. அது இன்னும் தொடர்கிறது. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பகுதியை சேர்ந்தவர் ஜாகீர், தொழிலதிபர். இவருக்கும் பண்ருட்டி அருகே புலவன்குப்பத்தை சேர்ந்த உலகநாதன் என்பவருக்கும் நட்பு இருந்தது. இதில் உலகநாதன் என்பவர் தன்னிடம் பல கோடி மதிப்பிலான இரிடியம் இருப்பதாகவும், அதை நீ வாங்கிகொண்டால் உனது தொழில் இந்திய அளவில் முன்னேற்றமடைய உதவியாக இருக்கும், அதற்காக சிறு தொகை கொடுத்தால் போதும் என ஜாகிரிடம் கூறியுள்ளார். இதை நம்பிய ஜாகிர் கடந்த 2 வருடத்திற்கு முன்பு புலவன்குப்பம் கிராமத்திலிருந்து இரிடியம் வாங்க வந்தார். அதற்கு ஒப்பந்தம் பேசப்பட்டு ரூ.4 லட்சம் கொடுத்தால் இரிடியம் கொடுப்பதாக பேசி முடிக்கப்பட்டது.

இதனையடுத்து ஜாகிர் நண்பரான சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த ராஜன் மூலம் இரு தவணையாக ரூ.2.15 லட்சம் உலகநாதனிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், இரிடியத்தை கொடுக்காமல் அனுப்பி உள்ளார். இந்த சூழ்நிலையில் கடந்த ஒரு வார காலமாக இரிடியத்தை பெற்றே தீரவேண்டும் எனற நோக்கத்தில் ஜாகீர், அவரது நண்பர் சீனுவாசன் மூலம் நெய்வேலி வந்து உலகநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உலகநாதன் தற்போது, நெய்வேலி வட்டம் 3ல் வசித்து வரும் என்எல்சி அலுவலரான பாலசுப்ரமணியனிடம் உள்ளது என்று கூறி அழைத்து சென்றார்.  

அங்கு ஏற்கனவே பேசியபடி ரூ.4 லட்சம் கொடுத்தால்தான் இரிடியம் கொடுக்கப்படும் என கூறி உள்ளார். இதற்கு இரிடியத்தை காட்டு பணத்தை ஆப் மூலம் அனுப்புகிறேன் என கூறியதால் இருவரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் உலகநாதன், என்எல்சி அலுவலரான பாலசுப்ரமணியன் ஆகியோர் சேர்ந்து புலவன்குப்பத்தில் உள்ளது வா என அழைத்து சென்று அங்கு ஜாகீர், அவரது நண்பர் சீனுவாசனை இரும்பு, உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கி பணம் கொடுத்தால் மட்டுமே இரிடியம் கொடுக்க முடியும் இல்லையென்றால் கொன்றுவிடுவோம் என மிரட்டி உள்ளனர்.

படுகாயமடைந்த ஜாகீர், சீனுவாசன் ஆகியோர் அங்கிருந்து தப்பித்து நள்ளிரவில் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தனிப்படை போலீசார் விடிய, விடிய தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் நெய்வேலி வட்டம்3 என்எல்சியில் பணிபுரியும் பாலசுப்ரமணியன்(51), பண்ருட்டி அருகே புலவன்குப்பத்தை சேர்ந்த உலகநாதன்(44) ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் இரிடியம் என்ற பொருள் இல்லாமல் இரிடியம் என்பது போல போலியாக செட்டப் செய்து விற்க முயன்றது தெரிய வந்தது. இந்நிலையில் சென்னை தாம்பரத்தில் எலக்ட்ரீசியனாக வேலையும் ராஜன் என்பவர்தான் முக்கிய நபராக செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

Tags : NLC , Two arrested, including NLC officer, for making fake iridium in chess hunting style
× RELATED விபத்தில் என்எல்சி தனி அலுவலர் இறப்பு;...