அமித்ஷா பேச்சு ஒருமைப்பாட்டுக்கு வேட்டுவைக்கும்: கி.வீரமணி

திருவாரூர்: திருவாரூரில் திக தலைவர் கி.வீரமணி அளித்த பேட்டி: தமிழகத்தில் சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. 10 மாத காலத்தில் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒப்பற்ற முதல்வராக திகழ்வதுடன் முதல்வர்களில் முதல்வராக திகழ்ந்து வருகிறார். ஒரே நாடு ஒரே மொழி, அதுவும் இந்தி மொழி திட்டத்தை மக்களிடம் திணிக்க பாஜக அரசு முயன்று வருகிறது.

சமஸ்கிருதத்தை நேரடியாக திணிக்க முடியாது என்பதற்காக இந்தி மொழியை தற்போது கையில் எடுத்துள்ளது. அதிகம் பேசுவதால் இந்தி மொழி சிறந்த மொழி என்று கூறுகிறார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்த பேச்சு, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் வகையில் உள்ளது. தற்போது இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் மட்டும் போராட்டம் நடந்து வரும் நிலையில் அமித்ஷாவின் பேச்சு காரணமாக அகில இந்திய போராட்டமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: