×

மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை: குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து

தென்காசி: குற்றாலம் மேற்குத்தொடர்ச்சி மலையில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக நேற்று முன்தினம் வரை வறண்டு காணப்பட்ட அருவிகளில் சற்று தண்ணீர் விழுகிறது. குற்றாலத்தில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக வெயில் வாட்டி வந்தது. சுட்டெரித்த அனலின் தாக்கம் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து வறண்ட நிலையை அடைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் குற்றாலம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த திடீர் மழை காரணமாக அருவிகளில் நேற்று காலை முதல் சிறிதளவு தண்ணீர் விழுகிறது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் சுமாராகவும், பெண்கள் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் 3 பிரிவுகளில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. பழைய குற்றாலத்திலும் குறைவாக தண்ணீர் விழுந்தது. கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் சுமாராக காணப்படுகிறது.

Tags : Western Ghats ,Courtallam Falls , Rainfall in the Western Ghats: Water supply to Courtallam Falls
× RELATED கன்றுக்குட்டியை தாக்கி கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்