×

மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சையில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வும் மையம் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி  மற்றும்  வெப்பசலனம் காரணமாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்க மற்றும் காரைக்காலில் அடுத்த 3 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும், தென் தமிழகம்,  நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல் தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் வருகிற 12-ம் தேதி தென் தமிழகம், கோயம்பத்தூர், நீலகிரி, திருப்பூர், சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 13-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி  இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Mayiladura ,Nagam , Mayiladuthurai, Nagai and 3 other districts are likely to receive moderate rainfall over the next 3 hours: Meteorological Department.
× RELATED முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: இன்று...