உக்ரைன் குழந்தைகளுக்கு உதவுங்க: பிரியங்கா சோப்ரா வேண்டுகோள்

புதுடெல்லி: பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற பிரபல நடிகையும், யுனிசெஃப் நல்லெண்ணத் தூதரான பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘உக்ரைன் போரால் இடம்பெயர்ந்துள்ள அகதிகளுக்கு உலக தலைவர்கள் உதவ வேண்டும். அவர்கள் படும்பாடை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அதிகளவில் குழந்தைகள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். உலகத் தலைவர்கள் எழுந்து நின்று அவர்களுக்குத் தேவையான பில்லியன்களை (உதவித்தொகை) அளிப்பீர்களா?’ என்று கேட்டுள்ளார். மேலும், உக்ரைன் குழந்தைகளுக்கு உதவுவதற்காக டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது பயோவில் யுனிசெஃப் நன்கொடை இணைப்பை இணைத்துள்ளார்.

Related Stories: