மீஞ்சூர் பகுதிகளில் பெட்டிக் கடைகளில் பதுக்கி விற்ற புகையிலை பொருட்கள் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் ஜவஹர்லால் உத்தரவின்பேரில் மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் மேற்பார்வையில் மாவட்ட சுகாதார துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மோகன் தலைமையில் மீஞ்சூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் அப்துல் வகாப், லஷ்மி நாராயணன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழு மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டக்கரை, வெள்ளிவாயல்சாவடி கிராமங்களில் உள்ள பெட்டி கடைகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு விற்பனைக்கு வைத்திருந்த குட்கா உள்ளிட்ட பல்வேறு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பெட்டிக்கடைகளில் சிறுவர்களுக்கு பீடி, சிகரெட் உள்பட தடை செய்யப்பட்ட பல்வேறு புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், பெட்டிக்கடைகளின் முன்பு சிகரெட் பிடித்தவர்களிடம், ‘பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது’ என அதிகாரிகள் அறிவுறுத்தினர். பின்னர் அங்கு புகை பிடிக்கக்கூடாது என அறிவிப்பு பலகை வைக்க கடை உரிமையாளர்களிடம் வலியுறுத்தினர்.

Related Stories: