×

சி.ஆர்.பி.எப் வீரர்கள் ரத்ததானம்

ஆவடி: பாகிஸ்தான் ராணுவத்தின் படையணிக்கு எதிராக ஏப்ரல் 1965ம் ஆண்டு ரான் ஆப் கட்ச்சில் (குஜராத்) சர்தார் மற்றும் தக் பகுதிகளின் இந்திய எல்லைப் பகுதிகளில் வீரத்துடன் போராடிய மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களின் தியாகத்தை நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை ஆவடி கூட்டு மருத்துவமனை இணைந்து, ஆவடி மத்திய ரிசர்வ் காவல் படை வளாகத்தில் நேற்று ரத்த தான முகாமை நடத்தியது. இதில் ஆவடி சி.ஆர்.பி.எப் டிஜிபி தினகரன் ரத்தம் வழங்கி முகாமினை துவங்கி வைத்தார். மேலும், ரத்த தானம் வழங்கிய அவருக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை சார்பில் ரத்த தானம் வழங்கியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் சி.ஆர்.பி.எப் வீரர்கள் ஒவ்வொருவராக ரத்த தானம் வழங்கினர்.

Tags : CRPF , CRPF soldiers donate blood
× RELATED மணிப்பூர் சிஆர்பிஎப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்; 2 வீரர்கள் பலி