விராமதி கண்மாயில் மீன்பிடித் திருவிழா: 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள விராமதி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது, நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழாவில் விராமதி, கீழச்சிவல்பட்டி, முத்தூர், சிறுகூடல்பட்டி, அம்மாபட்டி, இரணியூர், இளையாத்தங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுப்புற கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் அறிகூடை, கச்சாவலை, ஊத்தா, மூங்கில் கூடை, கொசுவலை உள்ளிட்டவைகளை கொண்டு மீன்களை பிடித்தனர், ஜிலேபி, கெண்டை, விரால் மீன் போன்ற வகையான மீன்களை மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டோர் பிடித்து சென்றனர், நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: